6 Quotes by எஸ்.ராமகிருஷ்ணன் about literature
- Author எஸ்.ராமகிருஷ்ணன்
-
Quote
கவிதை வாசகன் ஜென் கவிதைகளின் முன்பாகத் தன் வயதை இழக்கிறான். தன்னைப் பற்றிய பொது பிம்பங்களை, கருத்தாக்கங்களை நழுவ விடுகிறான். இப்போது அவனுக்கும் அவன் அருகில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பிற்கும் பேதமில்லை. இரண்டும் உயிர்நிலையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் உலகம் பிரம்மாண்டமானதாகயிருக்கின்றது. இரண்டும் உலகின் தீராத அன்றாட இயக்கத்தில் அலைந்தபடியே இருக்கின்றன.
- Tags
- Share
- Author எஸ்.ராமகிருஷ்ணன்
-
Quote
கவிதை என்பது நீர்நிலையை நாடி வரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும், எது தரைஇறங்கும் என்று தெரியாது. எவ்வழியே இப்பறவைகள் வந்தன. எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை. பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல அறிந்த, அறியாத விந்தைகள் கொண்டவை கவிதை.
- Tags
- Share
- Author எஸ்.ராமகிருஷ்ணன்
-
Quote
உரைநடை எழுத்து என்பது சந்தையை வேடிக்கை பார்ப்பது போன்றது. அங்கே காண் உலகம் மிக யதார்த்தமாகத் தெரியும். வாழ்வின் நெருக்கடியும் பண்டமாற்றும் நேரடியாகக் காணமுடியும். மேலும் ஒரே இரைச்சல், இடைவிடாத பேச்சு நிரம்பியிருக்கும். ஒரே இடத்தினுள் நூறுவிதமான நிகழ்வுகள். அன்றாட தேவைகளுக்கான அலைமோதல்கள் நடைபெறும். சந்தைக்கான பொருளின் விலை பணம், ஏமாற்றம், பிழைப்பிற்கான முட்டி மோதல்கள் என காலில் மண்ணும் நுரையீரலில் புழுதியும் படியும்படியான இயல்பு வாழ்வு கொண்டதாகயிருக்கும்.
- Tags
- Share
- Author எஸ்.ராமகிருஷ்ணன்
-
Quote
வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களை வைத்துக்கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆதங்கப்படுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது.""மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.
- Tags
- Share
- Author எஸ்.ராமகிருஷ்ணன்
-
Quote
ஒரு எழுத்தாளன் மீது வைக்கப்படும் விமர்சனம் அவனை ஒன்றும் செய்துவிடாது.நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.
- Tags
- Share
- Author எஸ்.ராமகிருஷ்ணன்
-
Quote
புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்க கூடும்.""அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள்,சுயபுகழ்ச்சிகள், ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடையச் செய்துவிட முடியாது.அவை புகைமயக்கம் மட்டுமே.
- Tags
- Share