4 Quotes by Jeyamohan about lust

  • Author Jeyamohan
  • Quote

    காமத்தின் அனல்காற்று குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால், குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடுகிறது

  • Tags
  • Share

  • Author Jeyamohan
  • Quote

    நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலில் இருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. மனிதன் அளவுக்கு காமத்தையே எண்ணிக்கொண்டிருக்கும் பிற உயிரினம் ஏதும் இருக்க முடியாது. உள்ளத்துக்கு எல்லை இல்லை. ஆகவே மானுடனின் காமத்துக்கும் எல்லையே இல்லை. அது அவனுக்குள் பெருகிப்பெருகிச் சென்றபடியே இருக்கும். உண்மையில் காமத்தை கட்டுப்படுத்துதல் என்ற செயலைவிட ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் இந்த காமம் பலமடங்கு செயற்கையானது.

  • Tags
  • Share

  • Author Jeyamohan
  • Quote

    காமத்தை வெல்பவன் மட்டுமே அகங்காரத்தை வெல்லமுடியும். உலகம் மீது பரவி அதை மறைக்கும் அகங்காரத்தையும் வென்றவனாலேயே உலகை உண்மையில் அறியமுடியும். ’தன்னுடைய உண்மை’க்குப் பதிலாக ’உண்மை’யை அவனால்தான் அறிய முடியும். ஆகவேதான் காமத்தை வெல்லுதல் ஞானத்தின் முதலடியாக எல்லா மரபுகளிலும் சொல்லப்படுகிறது.

  • Tags
  • Share

  • Author Jeyamohan
  • Quote

    இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப்போன்றதல்ல. நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலில் இருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. மனிதன் அளவுக்கு காமத்தையே எண்ணிக்கொண்டிருக்கும் பிற உயிரினம் ஏதும் இருக்க முடியாது. உள்ளத்துக்கு எல்லை இல்லை. ஆகவே மானுடனின் காமத்துக்கும் எல்லையே இல்லை. அது அவனுக்குள் பெருகிப்பெருகிச் சென்றபடியே இருக்கும். உண்மையில் காமத்தை கட்டுப்படுத்துதல் என்ற செயலைவிட ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் இந்த காமம் பலமடங்கு செயற்கையானது

  • Tags
  • Share