15 Quotes by Vairamuthu

  • Author Vairamuthu
  • Quote

    மாறும்; எதுவும் மாறும். மாறுதல் ஓன்றே ஜீவிதம்; உயிர்ப்பின் அடையாளம். ஆனால் முன்னேற்றத்தின் விளைச்சலாக இருக்க வேண்டும் மாறுதல். கூட்டுப் புழுவிலிருந்து பட்டுப்பூச்சி பறப்ப்து மாறுதல்; கல் சிற்பமாவது மாறுதல். சிற்பம் உடைந்து கல்லாவதல்ல மாறுதல்.

  • Tags
  • Share


  • Author Vairamuthu
  • Quote

    தேவைக்கு ஆரம்பிக்கிற சம்பாத்தியம், ஆசைக்கு இழுத்துட்டுப் போகுது. ஆசை பேராசையில முடியுது. பேராசை மனவியாதியில கொண்டுபோய் விட்டுறது மனுசன.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அதுபோல் ஒரு கொடுமை இல்லை. வித்தியாசங்களே அடையாளங்கள்; ஓரே நிறத்தில் இருந்தால் வானவில்லுக்கு ஏது வசீகரம்? வேற்றுமை என்பது உலகியல்; அதில் ஒற்றுமை காண்பது வாழ்வியல்.

  • Tags
  • Share


  • Author Vairamuthu
  • Quote

    இந்தியாவில் பிடித்தது?""உழைப்பு.""பிடிக்காதது?""ஊழல்.""ஆனாலும் இந்தியா முன்னேறியிருக்கிறதே..!" "உண்மை. சேவல் உறங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப்போல சில அரசியல்வாதிகள் உறங்கும் போது இந்தியா முன்னேறிவிடுகிறது.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    சொற்களும் அம்புகளும் ஒன்றுதான். சொல்லுக்கும் அம்புக்கும் தனி பலம் ஏதுமில்லை. வீரத்திலும் சத்தியத்திலும் தோய்ந்து வருவதிலிருக்கிறது அம்புக்கும் சொல்லுக்குமான ஆற்றல்.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    சுவையான கதை; ஆனால் சோக முடிவு.""எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது; எல்லா சோகமும் ஒரு சுகமாய்க் கனிகிறது. காலனி ஆதிக்கம் உலகச் செல்வத்தை அள்ளிச் சென்றது சோகம்; உலகெங்கும் ஆங்கிலத்தை விட்டுச் சென்றது சுகம்.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    இயற்கையின் பெருமையே மானுடத்திற்கான அதன் தியாகம்தான். இயற்கையும் மனிதனும் வேறுவேறன்று. இயற்கையின் சிறுபிரதிதான் மனிதன்; மனிதனின் பெரும்பிரதிதான் இயற்கை. மனித வேர்களின் கீழே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் கசியும் கருணைதான் இயற்கை.

  • Tags
  • Share