11 Quotes by Samura about tamil

  • Author Samura
  • Quote

    தனக்குப்பின் ஒருவன் தலை தூக்குவான் என,தன் தலையைப்பற்றி அஞ்சாமல், முன்னின்று போராடுபவனே தலைவன்;முதிர்ந்த தலைவன், உதிர்ந்து போகவும் தயங்கமாட்டான்,முளைத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுபோக!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும்உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு!உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும்,இருக்கவேண்டும், நீ விட்ட வடு!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    சாதித்தவனை, சாதி பாராமல் பாராட்டு;நிறவேத்தியவனை, நிறம் பாராமல் பாராட்டு;இணக்கமாக இருப்பவனை, இனம் பாராமல் பாராட்டு;சமயத்தில் முடித்தவனை, சமயம் பாராமல் பாராட்டு!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    சிரமுடி கருப்பாக இருந்தால்தான் இளமை;கருவிழி கருப்பாக இருந்தால்தான் பார்வை;கருப்பு மேகம், வந்தால்தான் வளமை;இருட்டு, தினமும் வந்தால்தான் வாழ்க்கை!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    தடைகளை தாண்டிப்பார்;இன்னல்களை தளர்த்திப்பார்,வாய்ப்புகளை பயன்படுத்திப்பார்,வெற்றி கிடைக்கும், பொறுத்திருந்து பார்,திரும்பிப்பார்க்கும், பெருத்த இந்த பார்!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    இங்கு பெரியோன், சிறியோன் இல்லை,இங்கு கல்லோன், இல்லோனே உண்டு;தெரிந்ததை, பத்து பேருக்கு சொல்லிக்கொடு,இருப்பதை, அற்ற பேருக்கு அள்ளிக்கொடு!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    வெள்ளை மனதுடன் இருப்பதே மேல்,‘இல்லை’ என்ற மனசுக்காரன், இறப்பதே மேல்;வெள்ளைத்தாளிலே, எழுத்தாளரின் கலை எழுத்து தொடங்கும்,வெற்றுத்தாளிலே கையெழுத்திட்டவரின், தலை எழுத்து முடங்கும்!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    வேண்டும் என்று, இருக்கும் அறியாதவனுக்கு, புரியவைப்பதை விட,வேண்டுமென்றே இருக்கும் அறிந்தவனுக்கு, புரியவைப்பது கடினம்;நமக்கு தெரிந்தவனிடம் சண்டைபோட்டு விளையாடுதைவிட,நமக்கு தெரியாதவனிடம் விளையாட்டாய் சண்டையிடுவது ஆபத்து!

  • Tags
  • Share

  • Author Samura
  • Quote

    விவேகம்=========கட்டுப்பாடில்லாமல் தன் மனதை ஓடவிடுவது, ஆபத்தில் முடியும்,கட்டுப்பாடில்லாமல் வாகனத்தை ஓட்டிவிடுவது, விபத்தில் முடியும்!இடதுபுறமிருந்து முந்துவதும், வேகத்தை உந்துவதும், எதில் முடியும்?நம்பியவர்களிடமிருந்து நீங்குவதும், ரத்தம் சிந்துவதுமாக முடியும்!நிதானமாக, உன் வண்டியை நீ செலுத்தாவிட்டால்,நீ தானமாக, உன் உயிரையே செலுத்த வேண்டி வரும்!வாகன நேரத்தில், எல்லை அடையும் வரை, பொறுமையோடு ஓட்டுபவன் எவன்?வா! கண நேரத்தில், உன்னை அடைவேன்! எருமையோடு காத்திருப்பான் எமன்!

  • Tags
  • Share