பக்கத்து வீட்டுப் பாட்டியை வீட்டில் வந்து இருக்கச் சொல்லிவிட்டு மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு எழும்பூர் ஆஸ்பத்திரி அடைந்து அங்கிருந்த மணியை இழுத்து ஒலித்தான். பிரசவ ஆஸ்பத்திரிகளில் ஏன் ஆராய்ச்சி மணி மாதிரி இப்படியொரு ஏற்பாடு என்று அவனுக்குத் தோன்றியது. உடனே மனுநீதிச் சோழர் ஞாபகம் வந்தது, உடனே தேர்க்காலில் கன்றும் மகனும். இது அவனுடைய கலக்கத்தை அதிகரித்தது. இந்தியாவில் எல்லாக் காலங்களிலும் தெருக்களில் மாடுகள் உலவி வந்திருக்கின்றன என்ற பூர்வமான ஆதாரம் நல்ல சகுனமாக அவனுக்குப் படவில்லை.
-Ashokamitran
Select a background
More quotes by Ashokamitran
Popular Authors
A curated listing of popular authors.