15 Quotes by Vairamuthu

  • Author Vairamuthu
  • Quote

    இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறது எனக்கு உயிர் தந்த உடல். நேற்றுவரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல். நாளை வெறும் சொல். கடைசியில் எல்லா மனிதர்களும் வெறும் சொல்லாகித்தான் போகிறார்கள். அந்தச் சொல்லை உச்சரித்துக்கொண்டேயிருக்கும் கடைசி மனிதனோடு இரண்டாம் மரணம் அடைகிறார்கள்; அவ்வளவுதான்.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    தோல்வியை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மனிதர்கள். கன்னம் கிள்ளிச் சொல்லிக் கொடுப்பது வெற்றி; கன்னத்தில் அறைந்து சொல்லிக் கொடுப்பது தோல்வி.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    பூமியை மனிதன்தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ, அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பதும்.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    அவமானம் நேரலாம். ஓர் அவமானமோ காயமோ வெற்றிடமோதான் லட்சியத்திற்கு கருவறையாக முடியும். உடல், மானம் இரண்டையும் தியாகம் செய்ய முடியாதவன் நன்மை செய்ய முடியாது.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    மறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, சுரண்டப்படும் வாழ்க்கையை இந்திய உழவர்களுக்கு மீட்டுக் கொடுத்தால் போதும்; அவர்கள் வாழ்க்கை நிமிர்ந்துவிடும். இங்கே மண் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது; மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  • Tags
  • Share

  • Author Vairamuthu
  • Quote

    மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்.""நீ மிருகமா? தெய்வமா?""நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு, தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல.

  • Tags
  • Share