J

Jeyamohan

24quotes

Quotes by Jeyamohan

. தன் சிறந்த மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு தன் அடுத்த தலைமுறையை உருவாக்கும் சமூகங்களே வாழும் சமூகங்கள். வெல்லும் சமூகங்கள். சராசரியை முன்னிறுத்தும் சமூகங்கள் உறைந்துவிட்டவை. அடிமைப்பட்டவை.
"

என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன்

நோயாளியும், பித்தனும், ஞானியும், கலைஞனும் இரவில் தூங்குவதில்லை..

தன்னிரக்கம் விசித்திரமான ஒரு மனநிலை. அதைப்போல இனிய துக்கம் வேறில்லை. தன்னுடைய பலவீனங்கள் பிழைகள் செயலின்மை அனைத்தையும் அங்கே இனியவையாக ஆக்கிக்கொள்ளமுடியும். அனுபவிக்க அனுபவிக்க தன்னிரக்கம் பெருகும்

மனித மனம் என்பது பெரும்பாலும் சூழல்களின் சிருஷ்டி. உடல் என்ற மனிதனால் அறியமுடியாத அமைப்பின் ஒரு பகுதியே மனம் என்பது

அறிவதொவ்வொன்றும் அறியாமையையே..
"
அறிவதொவ்வொன்றும் அறியாமையையே..
பெரும்செயல்வீரர்கள் சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.

வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது

இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப்போன்றதல்ல. நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலில் இருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. மனிதன் அளவுக்கு காமத்தையே எண்ணிக்கொண்டிருக்கும் பிற உயிரினம் ஏதும் இருக்க முடியாது. உள்ளத்துக்கு எல்லை இல்லை. ஆகவே மானுடனின் காமத்துக்கும் எல்லையே இல்லை. அது அவனுக்குள் பெருகிப்பெருகிச் சென்றபடியே இருக்கும். உண்மையில் காமத்தை கட்டுப்படுத்துதல் என்ற செயலைவிட ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் இந்த காமம் பலமடங்கு செயற்கையானது

காமத்தை வெல்பவன் மட்டுமே அகங்காரத்தை வெல்லமுடியும். உலகம் மீது பரவி அதை மறைக்கும் அகங்காரத்தையும் வென்றவனாலேயே உலகை உண்மையில் அறியமுடியும். ’தன்னுடைய உண்மை’க்குப் பதிலாக ’உண்மை’யை அவனால்தான் அறிய முடியும். ஆகவேதான் காமத்தை வெல்லுதல் ஞானத்தின் முதலடியாக எல்லா மரபுகளிலும் சொல்லப்படுகிறது.

Showing 1 to 10 of 24 results